நாட்டில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படக் காரணமான மோடியின் ஆட்சி- மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா!
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியால் நாட்டில் மதம் ஆன்மிகம் சார்ந்த மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் ஓம்பிர்லா தனது தொகுதியில் ரூபாய் 5.50 கோடி மதிப்பில் கூட்டப்பட்ட நீச்சல் குளத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது :-
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் மேலும் பல வளர்ச்சியை ஈட்ட இருக்கிறது .மோடி ஆட்சியால் நாட்டில் மதம், ஆன்மீகம் சார்ந்த மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்கான போராட்டத்தில் பலர் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ள நேரிட்டது. இப்போது அயோத்தியிலௌ ராமர் கோயில் உருவாகிவிட்டது .ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய நாம் 70 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது . இந்த ஆட்சி தொடரும்போது இந்தியா வளர்ந்த நாடுகள் பட்டியலில் விரைவில் இணையும்.
காலணி ஆதிக்க காலகட்டத்தில் இருந்த பல தேவையற்ற காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன .அவற்றுக்கு பதிலாக புதிய குற்றவியல் நீதி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. காலணி ஆதிக்க அடிமை மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். விளையாட்டு துறையில் இந்தியா சர்வதேச சாதனைகளை படைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாகவே இங்கு நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
SOURCE :Dinamani