பிரதமரின் நிவாரண நிதிக்கு மேலும் ₹75 லட்சம் - இந்தியா ஹாக்கி அமைப்பு!

பிரதமரின் நிவாரண நிதிக்கு மேலும் ₹75 லட்சம் - இந்தியா ஹாக்கி அமைப்பு!

Update: 2020-04-06 07:29 GMT

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கலாம் என அறிவித்திருந்தார். இதற்கு நடிகர்கள் பிரபலங்கள் முக்கிய நிறுவனங்கள் உள்பட பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகிறார்கள்.

இதன் இடையில் சென்ற 1ஆம் தேதி இந்திய ஹாக்கி அமைப்பு பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சத்தை வழங்கியது. தற்போது மேலும் ரூபாய் 75 லட்சம் பிரதமர் நிவாரண நிதி வழங்கப்படும் என ஹாக்கி அமைப்பின் தலைவர் முகமது முஸ்தக் அகமது தெரிவித்துள்ளார்.

Similar News