பட்டினிக்கு இரையானார் தாய்! இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் குப்பை தொட்டியில் போட்டார் மகன்! ஏழை தமிழ் பிராமணனின் இன்றைய நிலை !!

பட்டினிக்கு இரையானார் தாய்! இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் குப்பை தொட்டியில் போட்டார் மகன்! ஏழை தமிழ் பிராமணனின் இன்றைய நிலை !!

Update: 2019-08-13 12:01 GMT


பட்டினி தாயின் உயிரை குடித்தது. வறுமை அவருக்கு இறுதி சடங்குகூட செய்ய முடியாத நிலைக்கு மகனை தள்ளியது. 29 வயது பிராமணனுக்கு நேர்ந்த கொடுமை. முத்துநகர் என்ற தூத்துக்குடியில்தான் இந்த துக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.


துாத்துக்குடி தனசேகரன்நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமணன். 32 வயதான இவர், பிராமண சமுதாயத்தை சேர்ந்த. சிறிய கோவில்களில் பூஜை செய்து வந்தார்.


இவரது தாய் வசந்தி (வயது 57). இவருடன் வசித்து வந்தார். இவரின் தந்தை நாராயணசாமி (63) உறவினரின் உதவியால் சென்னையில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ளார்.





முத்துலட்சுமணனின் வருமானம், இருவரது வயிற்றுப்பாட்டுக்கே போதவில்லை. இதனால் வீட்டில் சரியாக சமைக்க முடியாத நிலையே நீடித்தது. இதனால் இருவரும் பட்டினியால் பரிதவித்து உள்ளனர். 


இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் பூஜையை முடித்துவிட்டு இரவு முத்துலட்சுமணன் வீடு திரும்பினார். அப்போது வசந்தி இறந்து கிடந்தார்.





இறுதி சடங்குகள் செய்வதற்குகூட முத்துலட்சுமணனிடம் பணமில்லை. என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை. இறுதியில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பெற்ற தாய் வசந்தியின் உடலை துாக்கிச் சென்று, அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.


நேற்று காலை வழக்கம்போல, குப்பை அள்ள வந்த துப்புரவு பணியாளர்கள், பிணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


போலீசார் விரைந்து வந்து அந்த உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவ மனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த தாயின் இரைப்பையில் உணவுப் பொருட்கள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்ததை கண்ட டாக்டர்கள் கண்களில் கண்ணீர் வடிந்துள்ளது.


வறுமையின் காரணமாக வசந்தி நீண்ட நாட்களாகவே பட்டியில் இருந்துள்ளார். இறுதியில் அந்த பட்டினிக்கே இரையாகி விட்டார்.





இதுபற்றிய தகவல் பரவியதும், பிராமணர்கள் சங்கத்தினர் வந்து , வசந்தியின் உடலுக்கு முறையான இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர்.


முத்து லட்சுமணன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-


வீட்டுக்கு நான் ஒரே பையன். அர்ச்சகர் வேலையில் கிடைக்கிற வருமானத்துல குடும்பத்தை நடத்த முடியலை. அதனால, மயிலாப்பூர்ல இருக்கிற முதியோர் இல்லத்துல அப்பாவை சேர்த்துட்டேன். அம்மாவோடு நான் இங்க இருந்தேன். 


எட்டயபுரத்துல ஒரு கோயில் திருவிழாவில் அர்ச்சகர் வேலைக்காகப் போனேன். இரவு வந்து பார்த்தபோது அம்மா இறந்த நிலையில கிடந்தாங்க. அழுகையை அடக்க முடியலை. கூடப் பொறந்தவங்களும் யாரும் இல்ல. 


சொந்தக்காரங்க உதவியும் இல்லை. அதனால மனசைக் கல்லாக்கிட்டு அம்மாவைக் குளிப்பாட்டி, சேலைகட்டி பொட்டு வச்சு பெட்ஷீட்ல சுத்தி வீட்டுப் பக்கத்துல உள்ள இரும்பு குப்பைத் தொட்டிக்குள்ள போட்டுட்டேன். எனக்கு வேற வழி தெரியலை


இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள், உயர் ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையா? இல்லையா? என்றனர், வசந்தியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள்.


இதற்கு பதில் சொல்ல  வேண்டியவர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினும், அவரது நண்பர்களுமே.


Similar News