மேற்கு வங்க பேரணியில் பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்னையர் தின பரிசு!
அன்னையர் தினத்தை முன்னிட்டு மேற்குவங்க பேரணியில் தனது தாயின் உருவப்படத்தை பிரதமர் மோடி பரிசாக பெற்றார்.
மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மறைந்த தாய் ஹீராபென் மோடியின் உருவப்படத்தை பரிசாக பெற்றார்.பரிசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி , மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன. ஆனால் இந்தியாவில் நாங்கள் ஆண்டு முழுவதும் தாய் காளி, துர்கா மற்றும் தாய் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் டிசம்பர் 30-ம் தேதி அன்று குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்பட்டேல் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சமீபத்தில் மூன்றாம் கட்ட தேர்தலில் அகமதாபாத் வாக்குச்சாவயில் பிரதமர் மோடி வாக்களித்த பின்னர் தனது மறைந்த தாயை நினைவு கூர்ந்த போது உணர்ச்சிவசப்பட்டார் .2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது தாயார் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
SOURCE :Dinaseithi