59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி..! தமிழகம் உட்பட பல இடங்களில் பிரதமரே நேரடியாக கண்காணிப்பார்..!

59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி..! தமிழகம் உட்பட பல இடங்களில் பிரதமரே நேரடியாக கண்காணிப்பார்..!

Update: 2018-11-03 06:43 GMT
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் கடன் அளிக்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி நேற்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்துள்ளார்.
சிறு தொழில்கள் என்பது 25 இலட்ச ரூபாய் முதலீட்டிலிருந்து 5 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டுடன் தொடங்கப்படும் தொழில்களைக் குறிக்கும். நடுத்தரத் தொழில்கள் என்பது 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டுடன் தொடங்கப்படும் தொழில்களைக் குறிக்கும். உற்பத்தித் துறை அல்லது சேவைத்துறை இரண்டுக்குமே இந்த வரையறை பொருந்தும். பாரம்பரியமாகச் செய்து வரும் வணிகம் சார்ந்த தொழில்களும் இதில் அடங்கும். இந்த வரையறைகளை, 2016-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுச் சட்டத்தின்(MSMED ACT- 2016) மூலம் அறிந்து கொள்ளலாம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோர் நலனை காக்க மத்திய அரசு புதிய திட்டங்களை தொடங்கி உள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து பேசினார். தொழில்துறை வளர்ச்சிக்காக அரசு எடுத்துள்ள முயற்சிகளை பட்டியலிட்ட மோடி, இதனால் தான் தொழில் தொடங்க சிறந்த நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 4 ஆண்டுகளில் 23 இடங்களை கடந்து முன்னேற முடிந்துள்ளது என்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு 12 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர், விண்ணப்பித்த 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் புதிய திட்டத்தையும் பிரதமர்  தொடங்கி வைத்தார்.
சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க பெற்றுள்ள வட்டிக்கான மானியத்தை 3% இருந்து 5% உயர்த்தியும் மோடி அறிவிப்பை வெளியிட்டார்.இது குறித்து பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன் , தமிழகத்தில் 6 இடங்கள் உள்பட நாடு முழுக்க 100இடங்களில் தொழில் மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு மத்திய அரசின் புதிய அறிவிப்புகள் செயல்படுத்த படுகிறதா என்பதை பிரதமர் மோடியே நேரடியாக கண்காணிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News