காற்று மாசுபாட்டில் டெல்லியை முந்தியது மும்பை

இந்தியாவில் காற்று மாசுபாடு மிகுந்த நகரம் என்றால் அனைவருக்கும் சட்டென்று டெல்லி தான் நினைவுக்கு வரும். ஆனால் டெல்லியை பின்னுக்கு தள்ளிவிட்டது மும்பை.

Update: 2023-02-20 10:00 GMT

சுவிஸ் ஏர் ட்ராக்கிங் இன்டெக்ஸ் நிறுவனம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்துள்ள தகவல்களை பயன்படுத்தி இந்தியாவில் சில நிறுவனங்களுடன் இணைந்து காற்றின் தரத்தை கணக்கிடுகிறது. அமெரிக்க காற்று தர குறியீட்டு தரநிலைகளின் படி காற்றின் தரத்தை ஆரோக்கியமானது ஆரோக்கியமற்றது மற்றும் அபாயகரமானது என வகைப்படுத்தப்படுகிறது.


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் படி இந்த குளிர் காலத்தில் குறிப்பாக நவம்பர் ஜனவரி மாதங்களில் மும்பையில் காற்றின் தரம் மோசமான மற்றும் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இது முந்தைய மூன்று ஆண்டுகளில் கடந்து சென்ற குளிர்காலத்தை விட அதிகமாகும் .


தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு ஆய்வில் மும்பையில் காற்றில் கலந்துள்ள மாசு துகள்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை கட்டுமான தூசுகள் என்பது கண்டறியப்பட்டது.


மீதமுள்ள மாசுக்கள் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கழிவு கிடங்குகள் மூலம் காற்றில் கலக்கின்றன. உலகில் காற்று மாசு மிகுந்த நகரங்களின் பட்டியலில் மும்பை இரண்டாவது இடம் பிடித்த நிலையில் டெல்லி முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாதது ஆச்சரியம் அளித்துள்ளது.



 


Similar News