வேலூரில் முஸ்லிம் - கிறிஸ்தவ வாக்குகள் 4.5 லட்சம்! தி.மு.கவுக்கு கிடைத்தது 4.8 லட்சமே! இந்து ஓட்டு வங்கி உருவானது! அதிர்ச்சியில் உறைந்தது தி.மு.க!!

வேலூரில் முஸ்லிம் - கிறிஸ்தவ வாக்குகள் 4.5 லட்சம்! தி.மு.கவுக்கு கிடைத்தது 4.8 லட்சமே! இந்து ஓட்டு வங்கி உருவானது! அதிர்ச்சியில் உறைந்தது தி.மு.க!!

Update: 2019-08-09 11:11 GMT


வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ஆம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர் என்று முஸ்லிம்கள் கூறுகின்றனர். அதேபோல 1.5 லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ வாக்காளர்கள் உள்ளனர் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். 


எனவே இந்த தொகுதியில் உள்ள கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது என்கின்றனர்.


கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தி.மு.கவிற்குத்தான் வாக்களித்துள்ளதாக கூறுகின்றனர். தி.மு.கவினரம் இதைத்தான் தெரிவிக்கின்றனர்.


இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்றுள்ளார்.  ஏ.சி.சண்முகம்  477199 வாக்குகள் பெற்றுள்ளார். வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் பரிதாபமாக வெற்றி பெற்றார். 


கிறிஸ்தவ - முஸ்லிம் வாக்குகள் 4.5 லட்சம் இருந்தும், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு 485340 வாக்குகள்தான் கிடைத்துள்ளது. எனவே, இந்துக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானனோர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்களித்துள்ளனர். இது இந்துக்களின் ஒற்றுமையை பறை சாற்றுகிறது. இந்து ஓட்டு வங்கி உருவானது.   


இதன் மூலம் இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் தி.மு.கவிற்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.


வரும் காலங்களில் இந்துக்களின் ஒற்றுமை இன்னும் அதிகமாகும் நிலையே உள்ளது. எனவே அதிவிரைவில் இந்து விரோத சக்திகள் மற்றும் தேச விரோத கும்பல்கள் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.


வேலூர் தேர்தல் முடிவு இதைத்தான் தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.


Similar News