புதையலுக்கு ஆசைப்பட்டு சிலைகளை பெயர்த்த மர்ம ஆசாமிகள்!! பிரபல கோவில் தூண்களையும் தோண்டி கொடூரம் !!

புதையலுக்கு ஆசைப்பட்டு சிலைகளை பெயர்த்த மர்ம ஆசாமிகள்!! பிரபல கோவில் தூண்களையும் தோண்டி கொடூரம் !!

Update: 2019-08-12 10:22 GMT

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அச்சம்பேட்டை மண்டலம் வேல்புரு கிராமத்தில் மலை உச்சியில் மிகவும் 500 ஆண்டுகள் பழமையான  கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே மூலவர் சிலைக்கு முன்பாக மிகப்பெரிய நந்தி சிலை  உள்ளது.


இந்த நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை பூஜைகள் செய்வதற்காக வந்த கோவில் குருக்கள் நந்தி சிலை அடி பீடத்தில் இருந்து பெயர்க்கப்பட்டு சேதம் அடைந்த நிலையில் வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை கண்டார். மேலும் அருகே உள்ள நாகம் சிலை மற்றும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட மண்டபத்தின் அலங்கார தூண் சேதப்படுத்தப்பட்டு, பெயர்க்கப்பட்டுக் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது மட்டுமல்லாமல் கோவிலில் சில இடங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.


இது குறித்து அவர்கள் கூறுகையில் கோவிலில் புதையல் இருப்பதாகவும், பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் இங்கு புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பல காலமாக வதந்தி நிலவி வருகின்றன. எனவே புதையல் அடையும் நோக்கத்துக்காகவே இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவது உறுதி எனவும் அவர்கள் கூறினர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar News