வால்வு இருக்கும் N95 முக கவசத்தை கொரோனா பரவலை தடுக்கும் திறன் இல்லை - மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை.!

வால்வு இருக்கும் N95 முக கவசத்தை கொரோனா பரவலை தடுக்கும் திறன் இல்லை - மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை.!

Update: 2020-07-21 11:34 GMT

வால்வு பொருத்தப்பட்ட இருக்கும் N95 முக கவசத்தை பயன்படுத்தினால் கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் திறன் இல்லை என மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதை பற்றி அனைத்து மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா பரவுவதை தடுப்பதற்கு முகக்கவசம் முக்கியமானது. அண்மையில் ஆய்வு மூலம் முகக்கவசம் அணிவதால் கொரோனா தாக்கும் அபாயம் 65 சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது முகக்கவசம் அணிவது பற்றி மத்திய சுகாதார சேவையின் பொது இயக்குனர் எச்சரிக்கை கடிதத்தை மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி முதன்மைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.



இந்த N95 முக கவசத்தை நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களைத் தவிர பொதுமக்களும் N-95 முக கவசத்தை குறிப்பாக வால்வு சுவாசக் கருவியுடன் இருப்பதை பயன்படுத்துகின்றனர்.இந்த முகக்கவசத்தால் ஒருவரிடம் இருந்து கொரோனா வைரல் வெளிவருவதை தடுக்க முடியாது. இதனால் அனைவரும் மூக்கு, வாயை முழுமையாக மூடும் முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும். பொருத்தமற்ற முறையில் N-95 முகக்கவசத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

Similar News