பிரதமர் மோடி 20 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை!! ஒரிசா கூட்டத்தில் அமித்ஷா பேச்சு !

பிரதமர் மோடி 20 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை!! ஒரிசா கூட்டத்தில் அமித்ஷா பேச்சு !

Update: 2019-04-28 13:05 GMT

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற பொதுத்தேர்தலும் 4-வது கட்டமாக நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் ஜாஜ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-


பிஜு ஜனதாதளம் கட்சியின் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிதிநிறுவன மோசடி மற்றும் சுரங்க முறைகேடுகளில் தொடர்பு உள்ளது. ஆனால் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். ஒடிசாவில் பா.ஜனதா அரசு அமைந்தால் இந்த மோசடிகளில் தொடர்புடையவர்கள் 90 நாட்களுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.


 முதல்-மந்திரி நவீன் பட் நாயக்குக்கு ஒடிய மொழி தெரியாது. கடந்த 20 வருடங்களில் அவர் மொழியை கற்றுக்கொள்ளவும் இல்லை. எனவே ஒடிய மொழி தெரிந்த, தங்கள் பிரச்சினைகளை அறிந்து அவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு முதல்-மந்திரியை இந்த மாநில மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.


பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார். கடந்த 20 வருடங்களில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் ராகுல் காந்தி 2 மாதத்துக்கு ஒரு முறை நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு வெளிநாடு சென்றுவிடுகிறார். இவ்வாறு அமித்ஷா கூறினார்.


Similar News