மக்களவை மட்டுமல்ல மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை பெறுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி! இனி மசோதாக்கள் தடையின்றி நிறைவேறும் !

மக்களவை மட்டுமல்ல மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை பெறுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி! இனி மசோதாக்கள் தடையின்றி நிறைவேறும் !

Update: 2019-07-01 10:58 GMT

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மைஇல்லாததால் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற தடையாக உள்ளது. ஆனால், வரும் ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு‌ பா.ஜ.க வுக்கு பெருபான்மை கிடைக்கிறது.


ஜூலை 5ஆம் தேதி பீகார் , குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல்நடைபெறுகிறது. 4 இடங்கள் பா.ஜ.க.வு க்கு கிடைக்கும். ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநிலங்களவையின் பலம் 115ஆக உயரும். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள், இந்திய தேசிய லோக் தள கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி என 5 பேர் பா.ஜ.க வில். இணைந்துள்ளனர் இதன் மூலம் பா.ஜ.க ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரிக்கிறது. 245 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 123 உறுப்பினர்களை பெற்றால் பா.ஜ.க வுக்கு பெரும்பான்மை கிடைக்கும்.


ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு பாஜக கூட்டணியின் பலம் 120 ஆக இருக்கும் இந்நிலையில் தமிழகத்தில் 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் அதிமுக கூட்டணி சார்பில் 3 இடங்கள் கிடைக்கும் என்ற நிலையில், அவற்றின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்களாக மாறும். மேலும், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு மத்திய அரசால் மசோதாக்களைதடையின்றி நிறைவேற்றப்படும்.


Similar News