காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை மீது சரமாரி கல்வீச்சு: ரஜினி மீதான கடும் விமர்சனங்கள் காரணமா? பொதுமக்கள் கருத்து!

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை மீது சரமாரி கல்வீச்சு: ரஜினி மீதான கடும் விமர்சனங்கள் காரணமா? பொதுமக்கள் கருத்து!

Update: 2020-01-24 12:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள ஊர் கலியம்பேட்டை. இங்கு சாலையோரம் ஒரு பெரியார் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையின் மீது யாரோ மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு நேரத்தில் கல் வீசியுள்ளனர்.


இந்த கல் வீச்சு சம்பவத்தில் பெரியார் சிலையின் வலது கை மற்றும் முகம் கடும் சேதம் அடைந்துள்ளது. இதை அடுத்து அங்குள்ள திமுகவினர் திரண்டு வந்தனர். காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அங்கு 5க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கல்வீச்சை நடத்தியவர்களை பிடிக்க அருகே உள்ள சி.சி.டி.வி உதவியுடன் போலீசார் புலனாய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.


இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில் பல ஊர்களுக்கு செல்லும் பாதைகள் சந்திக்கும் சாலையில் சிலை அமைந்துள்ளதால் வெளியூர்காரர்கள் யாராவதுதான் இதை செய்திருக்க வேண்டும் என்றனர். வேறு சிலர் கூறுகையில், சமீபத்தில் பெரியார் குறித்து சில கருத்துக்களை ரஜினி வெளியிட்டார். இதனால் ரஜினி குறித்து சமூக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் மிகவும் கேவலமாக தாக்கி எழுதுகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்து கூட யாரேனும் செய்திருக்கலாம் என்றும் கூறினர். 


Similar News