கொரோனா வைரஸ் வார்டில் வேலை செய்யும் செவிலியர் வீடு திரும்புவதை நிறுத்தி, தாக்கிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

கொரோனா வைரஸ் வார்டில் வேலை செய்யும் செவிலியர் வீடு திரும்புவதை நிறுத்தி, தாக்கிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

Update: 2020-04-09 06:42 GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது.

மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் மருத்துவமனையில் தீவிரமாக பணிகளைச் செய்து வருகிறார்கள்..மேலும் வீட்டுக்கு செல்லலாம் என்று நினைத்தாலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் வீட்டிற்கு வரக்கூடாது என்று மிரட்டுகிறார்கள்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள மீர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அமுல்யா சிங். இவரது மனைவி நீலு குமாரி துணை செவிலியராக அங்கிருக்கும் மருத்துமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டில் வேலை பார்த்து வருகிறார்.


நீலு குமாரி வீட்டிற்கு வந்தால் கொரோனா வைரஸ் பரவி விடும் என பக்கத்து வீட்டுக்காரர்களான முன்னாள் வார்டு கவுன்சிலர் மற்றும் இரண்டு பெண்கள் தாக்கியதாக அங்கு இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிறகு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

இதைப்பற்றிய நீலு குமாரி செய்தியாளர்களிடம் பேசுகையில்: நான் கொரோனா வைரஸ் சிகிக்சை வார்டில் வேலைபார்ப்பதால், அவர்களின் விட்டு வாசல் வழியாக சென்றாலும் மற்றும் நான் குளிக்கும் தண்ணீர் வெளியே வருவதால் அதில் இருந்து கொரோனா வைரஸ் அவர்களை தாக்கிவிடும் என கூறி என்னை தாக்கினர்.

இவ்வாறு அவர் கூறினார்..  

Similar News