ஆகஸ்ட் 5 சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட டெல்லியில் உள்ள பாபர் சாலை!

ஆகஸ்ட் 5 சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட டெல்லியில் உள்ள பாபர் சாலை!

Update: 2020-08-05 12:48 GMT

செவ்வாய்க்கிழமையன்று டெல்லியில் உள்ள பாபர் சாலையை 'ஆகஸ்ட் 5 சாலை' என பா.ஜ.க தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான விஜய் கோயல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாற்றி எழுதினர்.

இந்த சம்பவம் அயோத்தியில் பூமி பூஜை நிகழ்வு நடைபெற ஒருநாள் முன்னதாக நிகழ்ந்து இருக்கிறது. முன்னதாக முகலாய கொடுங்கோலன் பாபரின் பெயரைக் கொண்ட பெயர் பலகையின் மீது 'ஆகஸ்ட் 5 சாலை' என்று அச்சிடப்பட்ட பலகையை விஜய் கோயல் வைத்துள்ளார். மேலும், " 'ஆகஸ்ட் 5 சாலை' என இருக்க வேண்டும், இல்லை என்றால் மற்றொரு சிறந்த ஆளுமையின் பெயரை சாலைக்கு சூட்ட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். பாபரின் பெயரில் இருந்த தெருவின் பெயர் பலகை கருப்பு வண்ணப்பூச்சு கொண்டு அடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள விஜய் கோயலின் இல்லத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் இந்த சாலை அமைந்துள்ள நிலையில் அவர் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்விட்டில் விஜய் கோயல், "பெங்காலி சந்தையை ஒட்டிய பாபர் சாலையின் பெயரை 'ஆகஸ்ட் 5 சாலை' என்று மாற்ற வேண்டும்" என கூறியுள்ளார். "அயோத்தியில் ராமர் கோவிலை அழித்த வெளிநாட்டு படையெடுப்பாளர் பாபர். எனவே, பாபர் சாலையின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

இன்று நல்ல முறையில் நடந்து முடிந்த பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி, மகேஷ் பாக்சந்க்கா, பவன்சிங்கால், RSS தலைவர் மோகன் பகவத், நிருத்யா கோபால் தாஸ் ஜி மகாராஜ், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News