க்யூஆர் கோடு மூலம் நடக்கும் புதிய மோசடி- மத்திய அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை!

க்யூ ஆர் கோடு மூலம் சமீபத்தில் புதுவிதமான மோசடிகள் நடந்து வருவதாகவும் பொதுமக்களை உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-01-25 12:00 GMT

க்யூஆர் கோடு மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடி வலையில் சிக்கி விடாமல் உஷாராக இருக்குமாறு பொதுமக்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


சைபர் குற்றவாளிகள் மோசடி இணையதளங்களுக்கு கொண்டு செல்லும் ஆபத்தான க்யூஆர் கோடை மொபைல் எண்ணுக்கு அனுப்புகின்றனர். இதனை ஸ்கேன் செய்தால் பிரவுசரில் மோசடி தளங்களுக்கு இட்டுச்செல்லும். எனவே ஒவ்வொரு முறை க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யும் முன் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பழைய வீட்டு உபயோகப் பொருள் ஒன்றை விற்பனை செய்ய விளம்பரம் செய்திருந்த அந்த நபரிடம், மோசடியாளர் பேசி, பொருளை தான் வாங்கிக் கொள்வதாகவும், ஒரு க்யூஆர் கோடை தாம் அனுப்புவதாகவும், அதனை இளைஞர் ஸ்கேன் செய்தால், உடனடியாக அவரது வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும் என்று கூறி க்யூஆர் கோடை அனுப்பியிருக்கிறார்.


அந்த க்யூஆர் கோடு இளைஞர் ஸ்கேன் செய்ததும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற மோசடியாளர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசும்  மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது.


SOURCE :NEWS

Similar News