இந்தியா - வங்காளதேசம் இடையே புதிய ரயில் பாதை: பிற நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தும் மோடி!

வடகிழக்கு மாநிலங்கள் வங்காளதேசம் இடையிலான முதலாவது ரயில் பாதையை பிரதமர் மோடியும் வங்காளதேச பிரதமர் மோடியும் காணொலி காட்சி மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

Update: 2023-11-03 03:07 GMT

இந்தியாவின் நிதியுதவியுடன் வங்காளதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வளர்ச்சி திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அவற்றின் தொடக்க விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடியும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் கூட்டாக மூன்று திட்டங்களையும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். அவற்றில் ஒரு திட்டம் திரிபுரா மாநிலம் நிஸிந்தாபூருக்கும் வங்காளதேசத்தின் கங்காசாகருக்கும் இடையே போடப்பட்ட ரயில் பாதை ஆகும்.


இதற்கு இந்தியா ரூபாய் 392 கோடி மானிய உதவி அளித்துள்ளது. இது15 கிலோமீட்டர் தூர ரயில் பாதை, வடகிழக்கு மாநிலங்களுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான முதலாவது ரயில் பாதை ஆகும். இதனால் அகர்தலாவிலிருந்து டாக்காவழியாக கொல்கத்தா செல்வதற்கான பயண நேரம் குறையும். எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கும் பயன்படும். வங்காளதேசத்தின் குல்னாவுக்கும் மோங்லா துறைமுகத்துக்கும் இடையே 65 கிலோ மீட்டர் தூர ரயில்பாதை வங்காளதேசத்தின் ரம்பால் பகுதியில் மைத்ரீ சூப்பர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகு ஆகியவை மற்ற இரு திட்டங்களாகும். தொடக்க விழாவின் போது பிரதமர் மோடி பேசியதாவது:-


இந்தியா வங்காளதேசம் ஒத்துழைப்பின் வெற்றியை கொண்டாட மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளோம். இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். கடந்த 9 ஆண்டுகளில் நாம் ஒன்றாக செய்த பணிகள் இதற்கு முன்பு நடந்தது இல்லை .இந்தியா வங்காளதேசம் ரயில் பாதையை திறந்து வைத்தது வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுதான். வடகிழக்கு மாநிலங்களுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான முதலாவது ரயில் பாதை இவ்வாறு அவர் பேசினார். ஷேக் ஹசீனா பேசியதாவது:-


மூன்று முக்கிய திட்டங்களை கூட்டாக தொடங்கி வைப்பது நம்மிடையே வலிமையான நட்புறவு இருப்பதை காட்டுகிறது. ஜி 20 மாநாட்டுக்கு நான் வந்தபோது கொடுத்த உபசரிப்புக்காக பிரதமர் மோடிக்கு நன்றி. மூன்று திட்டங்களும் இரு நாடுகளுக்கு இடையிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேலும் வலுப்படுத்தும் இவ்வாறு அவர் பேசினார் .


SOURCE :DAILY THANTHI

Similar News