செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிபிஎஃப் டெபாசிட்தாரர்களுக்கு புதிய சலுகை: மத்திய அரசு அறிவிப்பு, மகிழ்ச்சியில் மக்கள்.!

செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிபிஎஃப் டெபாசிட்தாரர்களுக்கு புதிய சலுகை: மத்திய அரசு அறிவிப்பு, மகிழ்ச்சியில் மக்கள்.!

Update: 2020-04-14 03:44 GMT

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழந்து, வருமானம் இழந்து இருக்கிறார்கள்.

வருமானமின்றி தவிப்பவர்களின் வேதனையைப் போக்கும் வகையில் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி பல சலுகைகளை அளித்துள்ளது. கடன் தவணைகளை 3 மாதங்களுக்குப் பின் செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தபால் நிலையங்களில் பிபிஎஃப் டெபாசிட்தாரர்கள், ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) வைத்திருப்போர் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்கால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் சுகன்யா சம்ரிதி கணக்கு வைத்திருப்பவர்களும் தங்களின் ஆண்டு குறைந்தபட்ச டெபாசிட் தொகையை ஜூன் மாதம் வரை செலுத்த மத்திய அரசு சலுகை அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சம் ட்விட்டரில் செய்தியை வெளியிட்டுள்ளது.




 


Similar News