அடித்தட்டு மக்களை ஆழமாக புரிந்து வைத்திருப்பவர் பிரதமர் மோடி.. பிரசாந்த் கிஷோர்..

Update: 2023-10-31 01:11 GMT

பிரதமர் நரேந்திர மோடி எப்படி அனைத்து சர்வேக்களிலும் புகழ்பெற்ற தலைவராக நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்? என்பது பற்றிய கேள்விக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளார். குறிப்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 45 வருட அரசியல் பயணம் குறித்து கருத்தை பிரசாந்த் கிஷோர் முன்வைத்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, பிரதமர் மோடி 45 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். இந்த பயணம் தான் அவரை பலமான தலைவராக மாறி உள்ளது.


15 ஆண்டு RSS வாயிலாகவும், 15 ஆண்டுகள் BJP கட்சிக்காவும், அடுத்த 15 வருடம் மக்களுக்காக பணி செய்து குஜராத் முதல்வரானார். இந்த அனுபவத்தை வைத்து பார்த்தால் நாட்டில் சிலர் மட்டுமே இப்படி இருப்பார்கள். இந்த நீண்ட அனுபவத்தின் மூலம் தான் பொதுமக்கள் என்ன கேட்க விரும்புகிறார்கள்? என்பதை மோடி புரிந்து கொண்டு சிறந்து விளங்குகிறார் என்றார். அது மட்டும் கிடையாது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைவருக்கும் கருத்துக்களையும் கேட்கக்கூடிய தலைவராக இருந்திருக்கிறார் அடிமட்ட மக்களின் கருத்துக்களையும் அவர் ஆழமாக கேட்கிறார் என்று அவர் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். 


தற்போது வலம் வரும் இளம் அரசியல்வாதிகள் அரசியல் வாழ்க்கையை ஈடுபடுவதற்கு முன்னர் அவர்கள் கட்டாயம் புகழ்பெற்ற அரசு தலைவராக விளங்கும் பிரதமர் மோடி அவர்களின் பயணத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய அட்வைஸை கொடுத்து இருக்கிறார். நரேந்திர மோடி ஜி-யின் 45 ஆண்டுகால பயணம், மக்கள், தேவைகள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றிய அவரது அடிமட்டப் புரிதல் போன்ற பல்வேறு நல்ல குணங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News