ஆயுர்வேத தினக் கொண்டாட்டம்.. மன அழுத்தத்தை குறைக்க வழிகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

Update: 2023-11-14 03:18 GMT

அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பாரம்பரிய அறிவு என்பதன் ஒரு பகுதியாக 8 வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடும் வகையில், சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலுடன் இணைந்து "வாழ்க்கைமுறை கோளாறுகளுக்குத் தீர்வுகாண்பதில் ஆயுர்வேதத்தின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வை நடத்தியது.


சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் தலைமை விஞ்ஞானி ஆர்.எஸ். ஜெயசோமு பங்கேற்பாளர்களை வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். ஆயுர்வேதத்தை நமது அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். புது தில்லி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் சாக்ஷி சர்மா தனது தலைமை உரையில், நோய்களிலிருந்து மீள்வதற்கான செயல்முறையை விட நல்ல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


பிரகிருதி, ஆயுர்வேத கடிகாரம், உணவு முறைகள், மன அழுத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கான உத்திகள் போன்ற ஆயுர்வேதத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அவரது சொற்பொழிவு அமைந்தது. சொற் பொழிவைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுமன் ரே ஒருங்கிணைத்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News