ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சி.. மோடி அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக விவசாயிகள்..
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையாப்பட்டி கிராமத்தில் சென்னை உர நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு நானோ திரவ யூரியா உரத்தினை ட்ரோன் மூலம் தெளிக்கும் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சியளிக்கப்பட்டது. இந்த யாத்திரையின் போது உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட நடுவட்டி பஞ்சாயத்தை சேர்ந்த கட்டபெட்டு, குண்டடா பகுதிகளில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் ஒரு பகுதியாக வாகனங்கள் மூலம் பொது மக்களிடையே மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.
மேலும் இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது விண்ணப்பங்களை வழங்கினர். மேலும் தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, பிரதமரின் உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களின் விழிப்புணர்வு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Input & Image courtesy: News