இத்தகைய வளர்ச்சியே இந்தியா வேகமாக கண்டுள்ளதற்கு பிரதமரின் தலைமை பண்பே காரணம் மாணவர்களிடையே புடின் பெருமிதம்!
ரஷ்ய நாட்டில் இன்று ரஷ்ய மாணவர்கள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கொண்டாடப்பட்ட ரஷ்ய மாணவர்கள் தினத்தை முன்னிட்டு ரஷ்யா அதிபர் புடின் மாணவர்களுடன் கலந்துரையாடும் பொழுது இந்தியாவை குறித்தும் பிரதமன் நரேந்திர மோடி குறித்தும் பாராட்டி பேசி உள்ளார்.
அதாவது உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா உள்ளது இந்தியா இந்த நிலையை அடைவதற்கு தற்போதைய இந்திய பிரதமரான மோடி அவர்களின் தலைமை பண்புகளே காரணம் என்றும் அவரது தலைமையில் தான் இந்தியா இத்தகைய வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என சர்வதேச அரங்கில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவை நம்பகத்தன்மையான கூட்டாளியாக ரஷ்யா கருதுகிறது! 150 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையை கடைப்பிடித்து வருகிறது இன்றைய உலகில் இதனை பின்பற்றுவது எளிதான விஷயம் அல்ல, அதே நேரத்தில் இதனை செய்வதற்கு இந்தியாவிற்கு உரிமையும் உள்ளது.. அதோடு மேற்குல நாடுகளின் அரசியல் விளையாட்டுகள் எதுவும் இந்தியாவிடம் எடுபடாது என்று இந்தியாவை குறித்தும் இந்தியாவில் தலைமை ஏற்றுள்ள பிரதமர் மோடியின் தலைமை பண்பை குறித்தும் பாராட்டினார்.
Source : Dinamalar