மகனை பறிகொடுத்த பெற்றோர்கள் முதல்வரிடம் முன்வைத்த கேள்வி! அலட்சியம் கட்டும் திமுக அரசு!
கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 22 வயது ஆன பிரசாந்த் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி வெளியானது. இந்த நிலையில் தன் மகனை இழந்த பெற்றோர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று திமுக அரசின் நோக்கி பிரசாந்தின் பெற்றோர்களான ஜோதிபாசு மற்றும் ராஜாத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி திருச்செந்தூர் கோவில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் திட்டம் திமுக அரசு தரப்பில் வெளியானது, அங்கு வசதிகள் செய்யப்பட்டதா அல்லது இல்லையா என்பதை விட கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? திருச்செந்தூர் கோவிலுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி என் குடும்பத்துடன் நாங்கள் வந்திருந்தோம் அப்பொழுது திருச்செந்தூர் கோவிலின் வளாகத் திண்ணையில் அமர்ந்திருந்த என் மகன் எந்த ஒரு பாதுகாப்பு வளையமும் இல்லாமல் அமைக்கப்பட்டு இருந்த எர்த் கம்பி வழியாக மின்சாரம் பாய்ச்சப்பட்டு அதில் உயிரிழந்தான்!
இதற்கு காரணமானவர்கள் மற்றும் அலட்சியம் காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டமும் மேற்கொண்டோம், அதனால் பிரிவு 174 கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்று எஃப் ஐ ஆர் பதிவு செய்தீர்கள், ஆனால் அதற்கு அடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை தடய அறிவியல் அறிக்கை கூட இன்னும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கு வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது, அரசு பணிகளின் தேர்விற்காக தயாராகிக் கொண்டிருந்த என் மகன் தற்பொழுது கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்து விட்டான்! தஞ்சாவூரில் ஏற்பட்ட மின்விபத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தி உடனடி நிவாரணம் என்று அறிவிப்பு கொடுத்த முதல்வர் மு க ஸ்டாலின் ஏன் எங்களது இழப்பை மதிக்கவில்லை? என்று உயிரிழந்த இளைஞரின் பெற்றோர்கள் கேள்வியை முன் வைத்துள்ளனர்.
Source : Dinamalar