உத்தரகாண்ட் மதரஸா பாடத்திட்டத்தில் ராமாயணம்! வக்பு வாரியம் அறிவிப்பு!

Update: 2024-02-01 01:32 GMT

ராமாயண கதைகளை உத்தரகாண்ட் மதரஸா பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் வக்பு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்களுக்கான கல்வி நிறுவனங்கள் மதரஸா என்று அழைக்கப்படும் இந்த நிறுவனங்களில் இஸ்லாம் மதம் பற்றிய பாடத்திட்டங்களுடனே கற்பிக்கப்படும் வழக்கத்தை கொண்டது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 117 மதரஸாகளின் பாடத்திட்டத்தில் ராமாயண கதையை சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் முதலில் டேராடூன், ஹரித்துவார், நைனிடால் மற்றும் உதம் சிங் ஆகிய நகரில் உள்ள மதரஸாக்களில் ராமாயண கதையை புதிய பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக உத்தரகாண்ட் வக்பு வாரிய தலைவர் ஷதாப் ஷாம்ஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் இந்திய கலாச்சாரம் மற்றும் உண்மையான மதிப்புகளை ராமாயண காவியம் எடுத்துரைக்கிறது, அதோடு ராமரின் குணநலன்கள் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக விளங்குகிறது அதனால் அவரின் குணநலங்களை குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளோம் மேலும் வக்பு வாரியத்தின் கீழ் இயங்குகின்ற 117 மதரஸாக்களில் சமஸ்கிருத மொழியுடன் ராமாயணத்தை குறித்த பாடங்களையும் கற்பித்த முடிவு எடுத்துள்ளோம்! இதன் மூலம் தங்கள் கலாச்சாரத்துடன் மாணவர்களால் இணைய முடியும் மேலும் இது நமது பாரம்பரியத்தை நிலை நிறுத்தவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் வழி வகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Source : Dinamalar 

Similar News