விவசாயிகள், பெண்கள், ஏழைகள் மற்றும் பெண்களுகாக முக்கியத்தும் கொடுத்த அரசு! நிர்மலா சீதாராமன் உரை!
மத்திய நிதியமைச்சர் பாலா சீதாராமன் 2024 - 2025 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பொழுது, நாட்டில் உள்ள விவசாயிகள் வேலைகள் பெண்கள் இளைஞர்கள் என நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக குடிநீர் மற்றும் கேஸ் வசதி என பல திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படுகிறது. மேலும் எங்களது அரசு யாரையும் ஒதுக்காமல் அனைவரையும் அரவணைக்கும் அரசாக உள்ளது. அதோடு மின்னனு வேளாண் சந்தயால் எட்டு கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என்றும் 11.8 கோடி விவசாயிகள் அரசின் திட்டங்கள் மூலம் பலனடைந்துள்ளனர்.
இந்திய கல்வித்துறையில் தேசிய கல்விக் கொள்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, நாட்டின் முன்னேற்றம் என்பது ஏழைகளின் முன்னேற்றத்தில் உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறோம் அதோடு கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர் கல்வி படிப்பது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 7 ஐஐடி, 16 ஐஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 3000 புதிய ஐடிஐகள், 390 பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரதமரின் காப்பீடு திட்ட மூலம் நான்கு கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.
Source : Dinamalar