கடந்த ஆண்டை விட அதிக மதிப்பு கொண்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மதிப்பு ரூபாய் 47.66 லட்சம் கோடி கடந்த ஆண்டை விட அதிகம்!

Update: 2024-02-02 06:15 GMT

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆகும் .2024- 25 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் புதிய அரசு அமைந்ததும் தாக்கல் செய்யப்படும். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருந்த போதும் கடந்த 2023 2024 இல் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை விட 6.10 % அதிகமாகும். அந்த வகையில் இடைக்காலபட்ஜெட்டின் மதிப்பு ரூபாய் 47.66 லட்சம் கோடி ஆகும்.


செலவினம் அதிகரிப்பு மற்றும் மூலதன ஒதுக்கீடு காரணமாக இந்த பட்ஜெட் மதிப்பு உயர்ந்து இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2023- 24 திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூபாய் 44.90 லட்சம் கோடி. கடன் இல்லாத வருவாய் மதிப்பீடு ரூபாய் 27.56 லட்சம் கோடி .இதில் வரி வருவாய் ரூபாய் 23.24 லட்சம் கோடி ஆகும்


2024 - 25 ஆம் ஆண்டுக்கான கடன் இல்லாத மொத்த வரவு மற்றும் மொத்த செலவினம் முறையே 30.80 லட்சம் கோடி மற்றும் ரூபாய் 47.66 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது .வரி வருவாய் 26.02 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கனவே மதிப்பிடப்பட்ட 11 சதவீதத்திற்கு பதிலாக 10.5 % ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News