மத்திய அரசின் அதிரடி உத்தரவு! அரிசி வியாபாரிகள் கவனத்திற்கு! வந்தாச்சு பாரத் அரிசி!
அரிசியின் வரத்து குறைந்துள்ள காரணத்தினால் மீண்டும் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இதனால் அரசு வியாபாரத்தை மேற்கொள்ளும் அனைவரும் அரிசியில் இருப்பு குறித்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் பல மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தையில் அரிசியின் வரத்து குறைய ஆரம்பித்து அரிசியின் விலை உயர ஆரம்பித்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு பாஸ்மதி அல்லாத அரசியை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் தடை விதித்தது. அதோடு கிலோவிற்கு ஐந்து ரூபாய் வரை அரிசியின் விலையை குறைத்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அரிசியின் வரத்து குறைவு ஏற்பட்டு அதன் விலை உயர ஆரம்பித்துள்ளது.
இதனால் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தை தடுக்கும் வகையிலும் அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு வர்த்தகர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், பெரிய வியாபாரிகள் அரிசி ஆலைகள் அரிசி மற்றும் நெல் வியாபாரிகள் என அரிசி வியாபாரத்தில் ஈடுபடும் அனைவரும் தங்களிடம் இருக்கும் அரிசி மற்றும் நெல்லின் கையிருப்பு விவரத்தை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று மத்திய அரசின் பொது விநியோகத் துறையின் இணையதளத்தில் கட்டாயம் பதிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை தமிழக அரசு அரிசி தொழில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று தமிழக உணவுத்துறைக்கு கூறியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பாரத் அரிசி என்ற பெயரில் ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
Source : Dinamalar