சனாதன தார்மீக மாநாடு! இந்து மதத்திற்கு திரும்ப ஏற்பாடு செய்யும் திருமலை!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பது குறித்த கருத்துக்களை முன்வைத்ததற்கு பிறகு நாடு முழுவதும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் கிளம்பியது. அதோடு சனாதனத்தை இன்னும் அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்த கருத்துக்களையும் போதனைகளையும் பதிவிட்டு வந்தனர் இந்த நிலையில் சனாதன தர்மத்தை காக்க திருமலை திருப்பதியில் இந்து சமய சனாதன தர்ம மாநாடு என்ற மாபெரும் மாநாடு மூன்று நாட்களாக நடைபெற்றது. அதோடு நேற்றுடன் இந்த மாநாட்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பல்வேறு தீர்மானங்கள் அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து இந்து சமய சனாதன தார்மீக மாநாட்டின் நிறைவு நாளில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகரன் ரெட்டி கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது, ஆஸ்தான மண்டப வளாகத்தில் இந்த மாநாடு நடைபெற்று வந்தது, அப்படி இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில் மகான்களின் ஆசியும் அமிர்தத் துளிகளும் தர்ம மழையாக பொழிவதை உணர முடிந்ததாகவும் ராமானுஜாச்சாரியார், குலசேகர ஆழ்வார் நம்மாழ்வார் வீர நரசிங்க தேவ ராகுலா என பலரின் திருநாமங்களை சொல்லி இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றுள்ளது மனநிறைவை தருகிறது என்றும் கூறினார்.
மேலும் இந்து தர்மத்தை எடுத்துச் செல்லும் பணிகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் கருத்தரங்கில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அதன்படி வேற்று மதத்தினர் கூட அவர்களின் விருப்பப்படி இந்து மதத்தில் தழுவ திருமலையில் புனித நீர் தெளித்து அவர்களை இந்து மதத்திற்கு வரவேற்கலாம் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர்களுக்காக திருமலையில் இடம் ஒதுக்கப்படும் என்றும் அப்படி இந்து மதத்தை பின்பற்றியவர்களுக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
Source : Dinamalar