உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல்! திமுக அமைச்சர் காந்தி குறித்து அண்ணாமலை சாடல்!

Update: 2024-02-07 11:04 GMT

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் பருத்தி சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்படும். ஆனால் கடந்த மாதம் வழங்கப்பட்ட வேட்டி சேலைகள் பருத்திக்கு பதிலாக பாலிஸ்டர் பயன்படுத்தப்பட்டு நெய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாடி உள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், நேற்றைய தினம், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி என் மண் என் மக்கள் பயணத்தின்போது, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் திரு. காந்தி அவர்களின் விஞ்ஞானப்பூர்வமான புதிய ஊழல் ஒன்றை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினோம்.

அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் கமிஷன் காந்தி என்றழைக்கப்படும் இவர், பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார். விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது. 

வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தப்படும், இந்த ஆண்டு பருத்தி நூல் குறைவாகவும் பாலியஸ்டர் நூல் அதிகமாகவும் பயன்படுத்தி நெசவு செய்துள்ளனர். கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலை வாங்காமல், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர். பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், கோவை ஜவுளி ஆராய்ச்சி மைய சோதனை நடத்தியதில் பெறப்பட்ட முடிவுகளையும் ஆதாரமாக இணைத்து பதிவிட்டுள்ளது அமைச்சர் காந்தி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Similar News