பிரதமர் புகைப்படத்துடன் செல்பி பாயிண்ட்கள்! இடம் தர மறுக்கும் தமிழக அரசு!

Update: 2024-02-09 10:22 GMT

1.14 கோடி முன்னுரிமை கொண்ட அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக அரசி வழங்க மாதம் இரண்டு லட்சம் டன் அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசு இலவசமாக வழங்குவதை மாநில அரசுகள் தான் தங்கள் நிதிலிருந்து வழங்குவதாக பல மாநில அரசுகள் கார்டுதாரர்களிடம் விளம்பரம் செய்கிறது. 

இதனால் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி மத்திய அரசால் வழங்கப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு அனைத்து ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்ற செல்ஃபி பாய்ண்டுகளை அமைக்க உத்தரவிட்டது. மேலும் தமிழகத்தில் மொத்தம் 1500 ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க இடம் கேட்கப்பட்டுள்ளது, 

ஆனால் இதுவரை எந்த ஒரு இடத்திற்கும் அனுமதி வழங்காமல் திமுக அரசு இந்த உத்தரவை தாமதப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் குறிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுமதி கிடைத்த பிறகு இந்திய உணவு கழகம் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் செல்பி பாய்ண்ட்களை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாவதற்கும் இந்த பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் திமுக அரசு எந்த ஒரு இடமும் வழங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : Dinamalar 

Similar News