தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சென்ற முதல் சிறப்பு ரயில்! வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்!
பல போராட்டங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமருக்கான ஒரு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இலவசமாக பயணிகளை அழைத்துச் செல்லும் அழைப்பை அறிவித்தது, இதனை அடுத்து தமிழகத்தில் இருந்து 34 சிறப்பு ரயில்களை கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களிலிருந்து அயோத்திக்கு செல்லும்படி இயக்கியது.
இதனை அடுத்து கோவையில் இருந்து அயோத்திக்கு நேற்று முதல் ரயில் புறப்பட்டு உள்ளது. அதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் எம்எல்ஏ'வுமான வானதி சீனிவாசன் வழி அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில்,.பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இருந்து அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கோவையிலிருந்து அயோத்தி செல்லும் சிறப்பு இரயிலை துவக்கி வைத்தேன். இப்புனித பயணத்திற்க்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராமரின் தரிசனம் மன நிறைவுடன் அமைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார். மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு இலவசமாக பயணிகளை அழைத்து செல்ல உள்ள முதல் சிறப்பு ரயில் குறித்து தனது மகிழ்ச்சியை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
Source : Dinamalar