ஐ.நா.,வில் இந்தியாவை நிரந்திர உறுப்பினராக வேண்டும்! ரஷ்யா வலியுறுத்தல்!

Update: 2024-02-12 03:31 GMT

உலகில் உள்ள 20 நாடுகளில் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பாக ஜி 20 செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது அதில் கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தியது. இதில் 20 உறுப்பு நாடுகள், 9 விருந்தின நாடுகள், 14 உலகப் பெருந்தலைவர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டு நிகழ்வின் பொழுது டெல்லியில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விடத்தின் முகப்பில் நடராஜர் சிலை வைக்கப்பட்டிருந்தது உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில் இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டென்னிஸ் அல்போவ் ஜி 20 மாநாட்டில் இந்தியா தனது தலைமை பன்மை நிறுபித்துள்ளது அதனால் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை தேர்வு செய்ய வேண்டும் என்றும் இதனால் கவுன்சிலில் சமநிலையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார். 

மேலும் ஐ.நா., அமைப்பில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் அதற்கேற்றார் போல் கடந்த 2021- 2022 ஆண்டில் இந்தியாவும் கவுன்சிலின் தலைமை பதவியில் தனது திறமையை நிரூபித்தது என்று கூறியுள்ளார். 

Source : Dinamalar 

Similar News