உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்ற ஆளுநர் அறிக்கை! ஆளுநர் மாளிகை விளக்கம்!
இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தமிழக ஆளுநரின் உரையுடன் துவங்கியது. ஆனால் தமிழக அரசு ஆளுநருக்காக தயாரித்துக் கொடுத்த உரையில் உண்மைக்கு மாறான தகவல் இருந்ததால் அதனை வாசிக்காமல் ஆளுநர் அவற்றை புறக்கணித்துவிட்டு இரண்டு நிமிடத்திற்குள் தனது உரையை முடித்துக் கொண்டார். இதற்கான விளக்கத்தை கவர்னர் மாளிகை கொடுத்துள்ளது,
அதாவது கவர்னர் மாளிகையில் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் கடந்த ஒன்பதாம் தேதி அரசிடமிருந்து ஆளுநரின் வரைவு முறை ஆளுநர் மாளிகையில் பெறப்பட்டது ஆளுநர் உரையின் உண்மைக்கு மாறான தகவல்கள் பல பகுதிகளில் இடம்பெற்று இருந்தன. இதனை எடுத்து மாண்புமிகு ஆளுநர் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரிவித்து கோப்புகளை திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. முதலில் கருத்தாக தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைத்திட வேண்டும் என்றும் இரண்டாவதாக ஆளுநரின் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை பிரதிபலிக்க வேண்டும் அதோடு சட்டமன்றம் கூடுவதற்கான காரணங்களை சட்டமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் இதை தவிர்த்து உண்மைக்கு புறமான தகவல்களை பரப்புவதற்கும் பாகுபாடான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதற்காக இருக்கக் கூடாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
ஆனால் தமிழக அரசு ஆளுநர் அளித்த அறிவுரைகளை புறக்கணித்து விட்டது, இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் ஆற்றிய பொழுது உண்மைக்கு மாறான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால் அரசியலமைப்பை கேலிகுறியாக்கி விடும் என்ற காரணத்தினால் உரையை முழுமையாக படிக்க இயலாமைக்கான காரணத்தையும் ஆளுநர் கூறிவிட்டு சட்டப்பேரவையில் தனது மரியாதையை வெளிப்படுத்திக் கொண்டு தமிழ்நாடு மக்களின் நலனுக்காக இந்த பேரவை கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து விட்டு தனது உரையை முடித்தார்.
அதற்குப் பிறகு சபாநாயகர் ஆளுநரின் முழு உரையை தமிழில் வாசித்து விட்டு நிகழ்ச்சி திட்டப்படி ஆளுநர் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் பொழுது சட்டப்பேரவை தலைவர் ஆளுநருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து நாதுராம் கோட்சே பின்பற்றுபவர் என கூறியுள்ளார். சட்டப்பேரவை தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால் தனது பதவியின் கண்ணியத்தையும் சபையும் மாண்பையும் குறைத்து விட்டார் ஆளுநருக்கு எதிரான நீண்ட விமர்சனத்தை சட்டப்பேரவை தலைவர் வெளிப்படுத்தியதால் ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தையும் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Source : Dinamalar