தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதி! சாதித்த ஶ்ரீபதி! தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!
தமிழகத்தின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதியாக திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி என்ற பெண் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார். இவருக்கு பி ஏ.பி.எல் சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணம் நடந்துள்ளது. அதோடு கர்ப்பம் அடைந்த நிலையிலும் நீதிபதி தேர்வுக்காக தயாராகிக் கொண்டு வந்த இவருக்கு தேர்வு தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையை பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீபதி தேர்வை புறக்கணிக்காமல் சென்னைக்கு வந்து தேர்வு எழுதி தற்போது நல்ல மதிப்பெண்கள் உடன் தமிழ்நாட்டில் பழங்குடியினர் பிரிவில் முதல் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது.
அதன் படி, புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின உரிமையியல் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரி திருமதி. ஸ்ரீபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாமானிய பெண்களும் தனது திறமையால் சாதிக்க முடியும் என நிரூபித்த நீதிபதி ஸ்ரீபதி அவர்களின் பணிகள் சிறக்கவும், நீதித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்....என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
Source : Dinamalar