இந்து மதம் மக்களை சகோதரத்துவத்துடன் அணுகவில்லை! காந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ்! தன் வாயால் வினையை தேடிய திருமாவளவன்!

Update: 2024-02-14 01:45 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருந்தார் அந்த பேட்டியில் பத்திரிகை நிறுவனம் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் பத்திரிக்கையாளர் தரப்பில் ஒருவேளை மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியாவில் என்ன நடக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது அதற்கு தொல். திருமாவளவன், 

ஆட்சிக்கு மீண்டும் பாஜக வருவதை கற்பனை கூட செய்ய முடியாது. இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான், வங்கதேசம் விளங்குகிறது. அதேபோன்று பௌத்த நாடாக சீனா, இலங்கை இருக்கிறது அதனால் இந்தியா ஏன் இந்து நாடாக இருக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்புவார்கள். அதோடு இந்து மதம் மக்களை சகோதரத்துவத்துடன் அணுகவில்லை! மேலும் அது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை புகுத்துகிறது. 

இதற்காகவே அம்பேத்கார், நேரு, காந்தி என அனைத்து தலைவர்களும் இந்தியா ஒரு மதசார்பின்மை நாடாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். பிராமணர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் காந்தி மதசார்பின்மையை வலியுறுத்திய காரணத்தினால் படுகொலை செய்தது. ஆதலால் மத சார்பின்மையை வலியுறுத்தும் சட்டத்தை தூக்கி எறிவதே ஆர்எஸ்எஸ் பாஜகவின் நோக்கம் என்று கூறியது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

Source : The Hindu Tamil thisai 

Similar News