சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கான காரணங்கள்! செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை!
தமிழக சட்டப்சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழக ஆளுநர் தனது உரையை 2 நிமிடத்தில் முடித்தார் மேலும் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருப்பதாகவும் அதனால் சபையின் கண்ணியத்தை கருதி இத்துடன் எனது உரையை முடிப்பதாகவும் கூறி தனது இருக்கையில் ஆளுநர் அமர்ந்த பிறகு சபாநாயகர் அப்பாவு ஆளுநரை குறித்து விமர்சிக்கும் வகையிலும் கோட்சே போன்றவர்கள் நீங்கள் என்று ஆளுநரை அவதூறாக பேசியதால் ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது சமூக வலைத்தளம் முழுவதும் வைரலானது அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அடுக்கியுள்ளார்.
சட்டசபையில் திமுகவின் தொண்டரை விட மோசமாக சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார், கட்சி சார்பிலும் பேசி உள்ளார். ஆனால் சபாநாயகருக்கு அவர் கட்சி சார்ந்த பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை மேலும் கவர்னருக்காக தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரையிலும் திட்டமிட்டு பரப்பபடும் பொய்கள் இடம் பெற்று இருந்தது!
அதாவது தமிழகத்திற்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மிகக் குறைந்த தொகை கிடைத்தது மழையை ஆளும் கட்சி கையாண்டுதலில் பாராட்டு என கவர்னர் உரையில் எழுதப்பட்டு இருந்தது. இப்படி முதல்வரின் சுயபுராணத்தை பாட கவர்னர் உரையில் எழுதி உள்ளனர் அதோடு திமுக எம்எல்ஏ போன்ற சபாநாயகர் பேசியதாலும் ஆளுநர் சட்டசபையில் இருந்து கிளம்பினார். அதோடு அரசு நிகழ்ச்சிகள் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்துடன் துவங்கி தேசிய கீதத்துடன் முடிய வேண்டும் என்று தான் ஆளுநர் கூறியுள்ளார் ஆனால் அதுவும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Source : Dinamalar