முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பாஜக! வாரணாசியில் போட்டியிடும் பிரதமர்!

Update: 2024-03-04 06:30 GMT

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புகள் வருகின்ற வாரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிற நிலையில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை முடிவு செய்து வெளியிட்டுள்ளது. இது மற்ற எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது ஏனென்றால் அவர்கள் இன்னும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையிலே உள்ளனர், ஆக கூட்டணியை முடிவு செய்யவில்லை ஆனால் அதற்குள் பாஜக தனது வேட்பாளர்களை முடிவு செய்து அதன் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு இருப்பது தேர்தலுக்கு பாஜக தயாராகியுள்ளது என்ற தகவலை காட்டுவதாக உள்ளது 

மேலும் அந்த முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 195 வேட்பாளர்கள் பெயரையும் அவர்கள் போட்டியிடும் தொகுதியையும் பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி உத்திர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளார். அதோடு மூத்த அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், மன்சுக்கு மாண்டவியா, பூபேந்திர யாதவ் போன்ற 34 அமைச்சர்களின் பெயர்களும் இந்த முதல் கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

அதோடு இந்த பட்டியலில் 50 வயதிற்கும் குறைவானவர்களின் 47 பேரின் பெயரும் 28 பெண்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும் இனி அடுத்த வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியலிலும் பெண்களின் பெயர்கள் அதிக அளவில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. 

Source : Dinamalar 

Similar News