பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்!

Update: 2024-03-05 10:27 GMT

உலக அளவில் நடக்கும் ஒலிம்பிக் இந்த ஆண்டு பாரிஸில் ஜனவரி 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முதல்முறையாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் போட்டியிடுவதற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் 16 இடங்களில் உள்ள அணிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற முடியும் என்று கூறப்பட்ட நிலையில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிசன் 15 வது இடத்தில் இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி 13-வது இடத்தையும் பிடித்து ஒலிம்பிக் போட்டியில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. இதனை சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

முன்னதாக 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் களம் இறங்கியது அதற்கு பிறகு தற்போது 16 ஆண்டுகள் கழித்து ஆண்கள் அணி ஒலிம்பிக்கில் விளையாட உள்ளதாகவும் ஆனால் டேபிள் டென்னிஸின் இந்திய மகளிர் அணி ஒலிம்பிக்கில் போட்டியிட உள்ளது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. 

Source : abp nadu

Similar News