தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழகம் வரும் பிரதமர்! வெளியான தகவல்!

Update: 2024-03-08 10:53 GMT

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

முன்னதாக 2024 ஆம் ஆண்டு பிறந்த இரண்டாவது தினத்தில் தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் திருச்சிக்கு வந்து விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு சென்றார். அதற்குப் பிறகு ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் சென்னை கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்துவிட்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி என தமிழகத்தில் உள்ள முக்கிய புனித தலங்களுக்கு சென்று வழிபட்டார்.


 இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமர் தமிழகத்திற்கு வந்த பொழுது பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்களின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதோடு தூத்துக்குடியில் முக்கிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். 

மேலும் கடந்த பிப்ரவரி நான்காம் தேதியும் தமிழகத்திற்கு வந்த பிரதமர் கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையே தொடங்கி வைத்துவிட்டு சென்றார். மேலும் அந்த பயணத்தில் சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாகவும் கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு பிரதமர் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. 


Source : The Hindu Tamil thisai 

Similar News