மீண்டும் மோடி தான் பிரதமர்! அமெரிக்க எம்பி நம்பிக்கை மற்றும் புகழாரம்!

Update: 2024-03-14 09:07 GMT

லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ளது. மேலும் அந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக மத்தியில் ஆட்சியை அமைப்பார் என்றும் இதன் மூலம் ஹட்ரிக் வெற்றியை பாஜக பதிவு செய்யும் என்று பல தனியா நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளில் தெரிவித்தன. 

இந்த நிலையில் இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு எம்பியாக கடந்த 2023 தேர்வு செய்யப்பட்ட ரிச்சர்ட் மெக்கார்மிக் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி வருகின்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன், ஏனென்றால் அவரது பரவலான புகழ், முற்போக்கான தலைமை, அவரது கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்களும் முக்கிய காரணமாகும். அதோடு அவரது திட்டங்கள் நாட்டில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. 

மேலும் அவரது தலைமையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 8 சதவீதம் வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News