இது தான் காரணமா...கச்சத்தீவு நம் கைவிட்டு போனதற்கு!! வெளியுறவு துறை அமைச்சர்!

Update: 2024-04-01 06:21 GMT

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து ஆர்டிஐயிடம் கேட்ட தகவலுக்குப் பிறகு கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளித்த பொழுது, பொதுமக்கள் இந்த கச்ச தீவு பிரச்சனை தொடர்பாக தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று! 

நீண்ட காலமாகவே இந்த பிரச்சனை பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது, 1974 இல் இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதோடு அன்று போடப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவின் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டது. 

அதுமட்டுமின்றி 1974 ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங் நாடாளுமன்றத்தில் பேசிய பொழுது கூட, இந்தியா இலங்கை இடையேயான ஒப்பந்தம் பாக் ஜலசந்தியில் கடல் எல்லையை வரையறைப்பதோடு இரு நாடுகளுக்கும் இடையேயான நியாயமான சமாதானமான ஒப்பந்தமாகவும் இது கருதப்படும் என்று நான் நம்புகிறேன், மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி இரு தரப்பினரும் மீன்பிடித்தல், புனித யாத்திரை மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய உரிமைகளை கடந்த காலங்களில் அனுபவித்து வந்தனர், அதோடு இந்த உரிமைகள் அனைத்தும் எதிர்காலத்திற்காக முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் பேசியதாக கூறியுள்ளார்! 

ஆனால் இப்படி கூறப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே இந்திய மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டது!. 1976 இல் ஒப்பந்தம் தடை செய்யப்பட்டதோடு இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்ச தீவு இலங்கையின் பிரத்தியேக பொருளாதர மண்டலமாக அறிவிக்கப்பட்டதோடு இந்த தீவில் இந்தியாவின் மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்றும் தெரிவித்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது முதல் வரும் எனக்கு இது குறித்து பலமுறை கடிதம் எழுதியுள்ளார் அதோடு நான் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கச்ச தீவு தொடர்பாக 21 முறை பதிலளித்துள்ளேன்! பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் ஒரு நேரடி பிரச்சனை இது! 

மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவது ஏற்க முடியாதது, இப்போதைய மத்திய அரசும் பிரதமர்களும் இந்தியாவில் நிலப்பரப்பின் மீது காட்டிய அலட்சியமே இந்த மாதிரியான பிரச்சனை எழுவதற்கு முக்கிய காரணம்! இதுதான் உண்மை என்ற கூறினார். 

Similar News