மைசூரில் நாளை பிரச்சாரம், முதல்முறையாக மேடையில் இணையும் பிரதமர் மோடி மற்றும் தேவகவுடா..!

Update: 2024-04-13 16:49 GMT

நாளை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட தலைவர்கள் மைசூரில் நடக்கும் பாஜக, மஜத கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

2024 லோக்சபா தேர்தலை கர்நாடகாவில் பாஜக மாஜத கட்சிகள் கூட்டணியில் எதிர்கொள்ள உள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து நாளை மைசூரில் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்துகிறது. 

அதாவது நாளை மாலை 4 மணி அளவில் நகரின் மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் மைசூர் பாஜக வேட்பாளர் யதுவீர், பாண்டியா மஜத வேட்பாளர் குமாரசாமி, சாம்ராஜ்நகர் வேட்பாளர் பால்ராஜ் உள்ளிட்ட சில வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். 

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் முதன்முறையாக ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். 

Source : Dinamalar 

Similar News