முதல்வர் ஜிஎஸ்டி பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது...விமர்சித்த எஸ்.ஜி. சூர்யா...!

Update: 2024-04-16 12:48 GMT

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியான தமிழக புத்தாண்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இதனை அடுத்து காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா திராவிட மாடலின் சாதனைகள் என்ற பெயரில் 2021 திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து திமுக செய்யாத வாக்குறுதிகளையும் மூன்று ஆண்டுகளாக நடந்த குற்ற சம்பவங்கள் குறித்த அறிக்கையையும் வெளியிட்டார். 

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ் ஜி சூர்யா, பத்தாண்டுகளாக மத்திய அரசு தமிழகத்திற்கும் நாட்டிற்கும் செய்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார், அடுத்ததாக ஒரு உணவகத்தில் வரி விதிக்கப்பட்டால் அந்த வரி மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பாதி மத்திய அரசுக்கும் மறு பாதி மாநில அரசிற்கும் செல்கிறது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பாகவே உணவகங்களின் மீதான வரி 17 சதவிகிதம் இருந்தது. ஆனால் தற்போது ஜிஎஸ்டி மூலம் கொள்ளை அடிப்பதாக ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

மேலும் ஜிஎஸ்டி தொடர்பான கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நெசவாளர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து விவாதிக்கப்படும் பிறகு அவர்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு அதை முழுமையாக நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார். 

Source : abp நாடு 

Similar News