கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை, மறு வாக்குப்பதிவு வேண்டும் - அண்ணாமலை குற்றச்சாட்டு!

Update: 2024-04-19 12:32 GMT

இன்றிலிருந்து ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நாட்டை ஆளும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக இன்று தமிழகம் உள்ளிட்ட புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை என்று தேர்தல் மேலிடப் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இப்படி அதிக வாக்காளர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு நடத்தப்படும் வாக்குப்பதிவு சரியானது அல்ல! அதனால் எந்த பகுதிகளில் எல்லாம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோ அங்கு மறுவாக்கு பதிவு நடத்தப்பட வேண்டும் எனவும் இந்த ஒரு லட்சம் ஓட்டுகளுக்கும் யார் பதில் சொல்வார்கள்? மேலும் இந்த செயல் அரசியல் ரீதியாக திமுகவினர் செய்துள்ள சதி எனவும் குற்றம் சாடியுள்ளார். 

Source : Dinamalar 

Similar News