ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்..

Update: 2024-04-20 16:56 GMT

மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 18-வது மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக நேற்று தேர்தலுக்கு வாக்காளர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து இருந்தது. நியாயமான, அமைதியான, எளிதில் அணுகக் கூடிய, அனைவரும் பங்கேற்கும் சுதந்திரமான தேர்தலுக்கு ஆணையம் உறுதி பூண்டுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் முதல் கட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கான குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் கியானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இறுதிகட்ட தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்தனர்.


முதல் கட்ட தேர்தல் குறித்த விவரங்கள் 2024, ஏப்ரல் 19 அன்று 102 மக்களவைத் தொகுதிகளிலுக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்துடன் அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு 92 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 1.87 லட்சம் வாக்குச்சாவடிகளில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்கள், பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்காக 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரயில்கள் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. அமைதியாகவும் சுமூகமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியானநடவடிக்கைகளை மேற்கொண்டு அதை வெற்றிகரமாக செய்து காட்டி இருக்கிறது. தேர்தல் நடைமுறைகள் பாதுகாப்பானதாக இருப்பதற்கு வாக்குச் சாவடிகளில் போதிய அளவு மத்தியப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


வாக்காளர்கள் எந்த வகையிலும் திசை திருப்பப் படாமல் கண்டிப்பாகவும், விரைந்தும் செயல்படுவதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கு 4,627 பறக்கும் படைகளும், 5208 நிலைக்கண்காணிப்புக் குழுக்களும், 2028 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும், 1255 வீடியோ பார்வையிடல் குழுக்களும் செயல்படும். சட்டவிரோதமாக மதுபானங்கள், போதைப்பொருள்கள், பணம், இலவசப் பொருட்கள், கொண்டுவரப்படாமல் கண்காணிப்பதற்கு மாநிலங்களுக்கு இடையே 1,374 சோதனைச் சாவடிகளும், சர்வதேச எல்லையில் 162 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடல் மற்றும் வான் பாதைகளிலும், கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News