அமுல் தயிரை கண்டு நடுங்கும் தமிழக அரசின் ஆவின் : குடோனில் இறக்கி விற்க நெருக்கடி!

Update: 2024-06-12 17:18 GMT

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியை விட தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் பால் மற்றும் பால் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் அதிமுகவின் ஆட்சியில் ஆவின் மூலம் மட்டுமே 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்றது. ஆனால் திமுகவின் ஆட்சியில் இது 26 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவினுக்கு நாள்தோறும் ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஆவின் நிறுவனத்தில் நடந்த சில பிரச்சனைகள் பெருமளவில் சர்ச்சையானது. அதுமட்டுமின்றி அதிக மக்கள் பயன்படுத்தி வந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டு மற்ற பால் பாக்கெட் விலையும் உயர்த்தப்பட்டது. மேலும் சில இடங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் ஆவினுக்கு போட்டியாக குஜராத் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான அமுல் நிறுவனம் களம் இறங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில், பால் பண்ணையை அமைத்துள்ள அமுல் நிறுவனம் பால், தயிர், பன்னீர் ஆகியவற்றை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விற்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் தமிழகத்தில் அமுல் விற்பனையை அனுமதிக்க கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அமுல் நிறுவனம் தமிழகத்தில் தங்கள் ஸ்தாபனத்தை பெருக்கி கொள்வதற்கு தங்களுக்கு சம்மதம் எனவும், எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தமிழக பால் முகவர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

இருப்பினும் திமுக அரசு அமலுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பால் விற்பனையை அமுல் நிறுவனம் தள்ளி வைத்து, தயிர் மற்றும் பன்னீர் விற்பனையை மட்டும் மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே அமுல் நிறுவனத்திற்கு குளிர்பதன கிடங்கு செங்குன்றம் அருகே அலமாதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடோனில் தயிர் மற்றும் பன்னீரையும் இறக்கி விற்பனை செய்வதற்கு ஆவின் அதிகாரிகள் மறைமுகமாக நெருக்கடி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல மாவட்டங்களில் மொத்த அமுல் விற்பனையாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் கட்டணம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆவின் அதிகாரிகளின் மறைமுக நெருக்கடியால் பூந்தமல்லி சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி தயிர் மற்றும் பன்னீரை விற்பனை செய்யும் நிலைக்குத் அமுல் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News