திருத்தேர் முறிந்து ஒருவர் பலி.. அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு.. இந்து முன்னணி கண்டனம்..

Update: 2024-06-25 13:39 GMT

இந்து முன்னணி அமைப்பினர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில், இந்து கோவில்களிலிருந்து வரும் வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கையை தீவிரமாக வைத்து இருக்கிறார்கள். மேலும் தொடர்ச்சியாக கோவில் தேரோட்டம் போது நடக்கும் சம்பவங்களை முன்னிட்டு அவர்கள் இந்த கோரிக்கையை தற்போது வலுவாக வைத்து இருக்கிறார்கள்.

இது பற்றி இந்து முன்னணியினர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து கூறும் பொழுது, "அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறவிருந்த நிலையில் திருத்தேர் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுபோன்ற நிகழ்வுகள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லையப்பர் கோவிலின் வடம் அறுந்து போனது. இன்று தேரே முறிந்து விழுந்து விட்டது.


இந்து விரோத பாசிஸ திமுக ஆட்சியில் அறநிலையத்துறை முற்றிலும் செயலிழந்து பணம் ஒன்று மட்டுமே குறியென, கோவில்களை பணம் சம்பாதிப்பதற்கான கம்பெனிகள் போன்று மாற்றி வைத்திருப்பதால் இதுபோன்ற துர்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அறநிலையத்துறைக்கு கோவில்களின் மீது அக்கறை இல்லையெனில் வெளியேறி தொலைய வேண்டியதுதானே" என பதிவிட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Hindumunnani

Tags:    

Similar News