மத்திய பட்ஜெட்டில் வருடா வருடம் அதிகரித்து வரும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு - குறை கூறும் ஸ்டாலினுக்கு அமர் பிரசாத் ரெட்டியின் கேள்வி!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு வருடா வருடம் அதிகரித்து வந்திருக்கிறது. இருந்தபோதும் பாஜக அரசை குறை கூறுவதையே திமுக அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-07-26 12:32 GMT

ஒவ்வொரு முறையும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பொழுதும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்த வண்ணமே இருக்கும் . பாஜக அரசு எந்த பாரபட்சமும் இன்றி எல்லா மாநிலங்களுக்கும் தாராளமாகவே நிதியை ஒதுக்கி வருகிறது. தமிழகத்திற்கும் அதே போல தான். ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்காக ஒதுக்கும் நிதியின் அளவு அதிகரித்துக் கொண்டே தான் வந்திருக்கிறது. ஆனால் எப்பொழுதுமே தமிழக முதல்வர் பாஜக அரசை குறை கூறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார். இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் இருந்து தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள்:

1. 2014-2015: ₹18,144 crore

2. 2015-2016: ₹20,056 crore

3. 2016-2017: ₹22,111 crore

4. 2017-2018: ₹24,914 crore

5. 2018-2019: ₹28,482 crore

6. 2019-2020: ₹33,232 crore

7. 2020-2021: ₹38,568 crore

8. 2021-2022: ₹42,964 crore

9. 2022-2023: ₹46,329 crore

10. 2023-2024: ₹51,829 crore

முதல்வருக்கு எனது கேள்வி" பிரதமரால் தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் தொடர்ந்து நிதி அதிகரித்து வருகிறது.ஆனால் எப்பொழுதுமே ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கி இருப்பதாக ஒரு போலி குற்றச்சாட்டை வைத்து நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததை நியாயப்படுத்தும் காரணம் என்ன?" இவ்வாறு அமர் பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பி உள்ளார்.

SOURCE :News 

Tags:    

Similar News