கண்ணீர் துளிகளை வர வைக்கும் வயநாடு நிலச்சரிவு: கண்டுகொள்ளாத வயநாடு முன்னாள் எம்.பி.ராகுல் காந்தி- காரி துப்பும் நெட்டிசன்கள்!
வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை பற்றி ராகுல் காந்தி கண்டு கொள்ளாதது நெட்டிசன்கள் இடையே பலத்த கேள்வியை எழுப்பியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ஆம் தேதி இரவில் கனமழை கொட்டியது .அதனால் வயநாட்டில் உள்ள முண்டக்கை,சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலை கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடக்கப்போகும் விபரீதத்தை உணராத நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் .
பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து போயினர். அதில் தப்பி பிழைத்தவர்களின் அலறல், அழுகை சத்தம் அங்கிருந்த மலை முகடுகளிலும் எதிரொலித்தது. இயற்கையின் கோர முகத்தைப் பார்த்தவர்கள் தங்கள் இருப்பிடம் ,உடைமை, உறவினர்கள் சிதைந்து கிடப்பதைக் கண்டு கதறி துடித்தனர். இதை அறிந்ததும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு பணியினர் வயநாட்டுக்கு விரைந்தனர். மேலும் ராணுவத்தினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர் .அவர்கள் அனைவரும் இணைந்து மீட்பு பணியை முடுக்கிவிட்டனர். இதற்கு ராணுவ ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் மத்திய , மாநில அரசுகளின் அனைத்து துறைகளும் களத்தில் குதித்தனர். பலி எண்ணிக்கை 256 ஆக உயர்ந்து நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
இந்நிலையில் வயநாடு மக்களால் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் சிறுபிள்ளை போல் கேள்வி எழுப்பி நாடாளுமன்றத்தின் மாண்புக்கே களங்கம் விளைவித்து கொண்டிருக்கிறார். இந்த துயரமான சூழ்நிலையில் அங்கு சென்று மக்களோடு நிற்க வேண்டிய ராகுல் காந்தியோ செல்வதற்கு ஏற்ற கால நிலை இல்லை .காலசூழ்நிலை ஒத்துழைக்கவில்லை என்று கூறிக்கொண்டு தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற பேரிடர் காலங்களில் எல்லாம் தோள் கொடுக்கும் ஆர்.எஸ். எஸ். அமைப்பினரோ நிலச்சரிவு ஏற்பட்ட முதல் நாளிலிருந்து களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றனர்.அதற்கு மேலாக பாஜகவின் மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் காலசூழ்நிலை எல்லாம் பார்க்காமல் களத்திற்கு சென்று மக்களுக்கு ஆறுதலாக நின்று வருகிறார். மீட்புக் குழு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பாஜக அமைச்சர் இவர்கள் எல்லாராலும் வர முடிந்த அந்த களத்திற்கு ராகுல் காந்தியால் மட்டும் வர முடியாதது ஏன் என்று வயநாடு மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
SOURCE :NEWS