அண்டை நாடுகளின் நலனிலும் அக்கறை கொண்ட மோடி அரசு - நிதி உதவியில் அசராத வள்ளலாக பிரதமர் மோடி!

டெல்லி வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார் மாலத்தீவுக்கு ரூ.3,360 கோடி நிதி உதவியை அறிவித்தார்.

Update: 2024-10-08 10:00 GMT
அண்டை நாடுகளின் நலனிலும் அக்கறை கொண்ட மோடி அரசு - நிதி உதவியில் அசராத வள்ளலாக பிரதமர் மோடி!
AddThis Website Tools

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஐந்து நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார். அவருடன் மனைவி சஜிதா முகமது மற்றும் பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாலத்தீவு அதிபர் வந்தபோதிலும் அவரது முதலாவது இருதரப்பு பயணம் இதுவே ஆகும். கடந்த ஆண்டு மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேறுமாறு மாலதி அதிபர் உத்தரவிட்டதால் இரு நாடுகளிடையே உறவு சீர்குலைந்தது இருப்பினும் அதன் பிறகு உறவு சீரடைந்தது இந்நிலையில் நேற்று மாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது அதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். முகமது முய்சுவுக்கு  முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் டெல்லி ராஜ்காட் சென்றார். அங்கு காந்தி சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி முகமது முய்சு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். இரு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா மாலத்தீவு இடையே ரூபாய் 3000 கோடிக்கான ரொக்க பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்நிய செலவாணி கையிருப்பு பிரச்சனையை சமாளிக்க மாலத்தீவுக்கு இந்த ஒப்பந்தம் உதவும். மாலத்தீவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள், வீடுகள் கட்டவும் சாலைகள் போடவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவுக்கு பிரதமர் மோடி 3,360 கோடி நிதி உதவி அறிவித்தார். பிரதமர் மோடியும் முகமது முய்சுவும் இணைந்து மாலத்தீவில் ரூபாய் அட்டையை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் மாலத்தீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் ரொக்கம் இல்லா பரிமாற்றம் செய்ய முடியும். கடன் வசதி மூலம் மாலத்தீவில் கட்டப்பட்ட 700 சமுதாய வீடுகளை மாலத்தீவிடம் இந்தியா ஒப்படைத்தது .மேலும் மாலத்தீவின் ஹனிமது விமான நிலையத்தின் புதிய ஓடு பாதையை பிரதமர் மோடியும் முகமது முய்சுவும் இணைந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தனர். பின்னர் இருவரும் இணைந்து கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது :-

மாலத்தீவு இந்தியாவின் நெருக்கமான நட்பு நாடு. இந்தியாவின் அண்டை நாட்டுக் கொள்கையில் மாலத்தீவு முக்கிய இடம் வகிக்கிறது. அண்டை நாட்டுக்கான பொறுப்புகளை இந்தியா எப்போதும் நிறைவேற்றி வந்துள்ளது. திலா புஷியில் புதிய வணிகத் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ஆதரவு அளிக்கும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியாவும் மாலத்தீவும் முடிவு செய்துள்ளன.மாலத்தீவில் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது .இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News