துண்டிக்கப்பட்ட மின்சாரம்.... அலட்சியமாக குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்த மின்சார ஊழியர்கள்!

Update: 2024-10-15 13:20 GMT


தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ள கடலங்குடியை சுற்றியுள்ள பல பகுதிகளில் நேற்று நெடு நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விரத்தி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடலங்குடி துணை மின் நிலையத்திடம் தொடர்பு கொண்டு உதவியை நாடியுள்ளனர். மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனையை எடுத்துக் கூறி புகார் அளித்து ஒரு தீர்வை பெறலாம் என இருளில் மூழ்கி இருந்த மக்கள் தொடர்ந்து முயற்சித்தும் மக்களின் தொலைபேசி அழைப்பை கடலங்குடி மின்வாரிய அதிகாரிகள் ஏற்காமல் அலைபேசிக்கும் பதிலளிக்காமல் இருந்துள்ளனர். 

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து கடலங்குடி துணை மின் நிலையத்திற்கு நேரில் சென்று ஊழியர்களிடம் மின்வெட்டு குறித்த பிரச்சனையை தெரிவிக்கலாம் என சென்ற பொழுது, அலுவலகத்திற்குள் இரண்டு ஊழியர்கள் குடிபோதையில் தூங்கி கொண்டிருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அதுவும் தொழிலாளர்கள் தங்கள் ஆடைகளை கழற்றிவிட்டு ஒரு சிதைந்த நிலையில் படித்திருந்துள்ளனர். தங்கள் பகுதியில் என்ன பிரச்சனை நடக்கிறது மின்சாரம் தொடர்பாக என்ன நடக்கிறது என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அலட்சியமாக தமிழக மின்வாரிய ஊழியர்கள் குடிபோதையில் படுத்துள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களை மக்கள் எழுப்பி மின்சாரம் துண்டிப்பு குறித்து தகவல் அளித்து உடனடியாக மின்சாரம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை அங்கிருந்து சில நபர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர், அது வைரலாகப் பரவி விமர்சனங்களை பெற்று வருகிறது. 

மேலும் மின்சார உபகரணங்களை கையாளுவதில் உள்ள பாதுகாப்பு அபாயங்கள் குறித்து கவலைகளை தெரிவித்த சில விமர்சகர்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அப்பகுதி மக்கள் முன் வைத்துள்ளனர். அதோடு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கழகத்தின் ஊழியர்களை கடுமையான மேற்பார்வை இட வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News